வானம் விட்டு இரங்கினாரே
vaanam vittu iranginaarae
வானம் விட்டு இரங்கினாரே இரங்கினாரே ஒரு மனிதராகவே தேவ திட்டம் நிறைவேற்றினாரே நிறைவேற்றினாரே மனிதராகவே
தாவீதின் மைந்தன் தாமாக வந்து தாட்பரிகின்றாரே புன்னகை பூத்த புண்ணியர் இன்று பூத்திருக்கிறாரே - 2
பிறந்தாரே பரன் ஜெனித்தாரே சுதன் உதித்தாரே நம்மை காத்திடவே - 2
1. இருளின் நாட்கள் முடிந்திடவே வெளிச்சம் தோன்றியதே அருளின் நாட்கள் வந்திடவே அன்பர் பிறந்தாரே - 2 பாவபாரம் போக்கிடவே பாலகன் பிறந்தாரே உலகின் சாபம் முறிந்திடவே மேய்ப்பராய் மலர்ந்தாரே - 2 - பிறந்தாரே
2. மனதின் ஆழம் தெரிந்தவரே மீட்பராய் பிறந்தாரே உறவின் ஆழம் புரிந்தவரே தம்மையே ஈந்தாரே - 2 தூய வாழ்வை அளித்திடவே தூயவர் பிறந்தாரே மாய வாழ்க்கை நீக்கிடவே மகிமையாய் வந்தாரே - 2
தாவீதின் மைந்தன் தாமாக வந்து தாட்பரிகின்றரே புன்னகை பூத்த புண்ணியர் இன்று பூத்திருக்கிறாரே - 2