வானம் புவி யாவும் செய்த
vaanam puvi yaavum seydha
1. வானம் புவி யாவும் செய்த வல்லவா தேவா ஏழையுருவாக வந்த இன்பமே நீ வா வா லாலிலா லையா லாலி.
2. மல்லிகை முல்லை மலர் மகிழ் பன்னீர் ரோஜா செல்வ வனம் பூ மலர சிறந்திருக்கும் ராஜா லாலி லாலையா லாலி
3. பஞ்சவர்ண கிளிகள் கொஞ்ச பவம் யாவும் துஞ்ச தஞ்சமென்றோர் மிஞ்ச மிஞ்ச தயாளு என்று கெஞ்ச லாலி லாலையா லாலி.
4. ஆதாரம் ஆறில் நின்று ஆடி வரும் அருளே ஆதாரம் உன்னையன்றி ஆருண்மைப் பொருளே லாலி லாலையா லாலி.