வானம் பூமியும் மாறிடினும்
vaanam poomiyum maaridinum
வானம் பூமியும் மாறிடினும் உம் வார்த்தை மாறாதது வாழ்வின்தீபமாய் வழிநடத்தும் உம் வசனம் நிலையானது
கண்கள் காணும் யாவும் ஓர் நாள் மாறும் இந்தமண்ணிலுள்ள மகிமையெல்லாம் மாறும் விண்ணில் காணும் நட்சத்திரங்கள் மாறும் என் எண்ணங்களும் சிந்தைகளும் மாறும் கடல் மாறும் மலைமாறும் உம் வார்த்தை மாறாதது
காலங்களும் சூழ்நிலையும் மாறும் நம் கால்கள் செல்லும் பாதைகளும் மாறும் காற்று வீசும் திசைகளும் மாறும் கடும் காரிருளும் காலையாக மாறும் மனம் மாறும் குணம் மாறும் உம் வார்த்தை மாறாதது
பந்தங்களும் பாசங்களும் மாறும் நாம் நம்பியுள்ள நட்பும் கூட மாறும் வளம் நிறைந்த வாழ்க்கை கூட மாறும் இந்த வாலிபத்தின் அழகும் கூட மாறும் நிலை மாறும் நிறம் மாறும் உம் வார்த்தை மாறாதது