வானம் பூமி யாவற்றிலும்யேசு மேலானவர்
vaanam poomi yaavatrilumyesu melaanavar
1. வானம் பூமி யாவற்றிலும்யேசு மேலானவர். மனிதர் தூதர் பேய்தானும்அவர் முன் வீழுவர்.
நான் நம்புவேன்(2) யேசு எனக்காய் மாண்டார் பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்.
2. ரட்சகர் உயிர் விட்டதும் எந்தனுக்காகவே வேறெந்த வாக்கு வாதமும் வேண்டுவதில்லையே.
3. பாவியின் பயம் யாவையும் நீக்கும் நாமம் இது நரக தண்டனையையும் தொலைத்திடும் இது.
4. பாவச் சங்கிலி யாவையும் தறிப்பார் என் யேசு வேதாளத்தின் தலையையும் நசுக்குவார் யேசு.
5. பாவத்தில் மாளும் யாவர்க்கும் உயிரளிப்பாரே பெலனற்ற ஆத்மாவுக்குச் சக்தி கொடுப்பாரே.
6. லோகம் இவ்வன்பின் மாட்சியை ருசித்துப் பார்க்காதோ? மீட்பர் உதிர வல்லமை வந்து சோதியாதோ?
7. சோதனை வரும் நேரத்தில் ஜெயம் தருவாரே ஜெயம் பெற்று நாம் ஜீவிக்க உதவி செய்வாரே