வானலோக தூதர்களே
vaanaloga thoodhargalae
1. வானலோக தூதர்களே! பூலோகிற்கு செல்லுங்கள் மேசியாவின் பிறப்பினை பறை சாற்றிடுங்களேன் ஆராதிப்போம் (2) பாலகன் ராஜனே.
2. மந்தையினை மேய்த்துக் காக்கும் வெளியின் மேய்ப்பர்களே நம்மில் தங்கும் தேவ சுதன் ஒளி வீசி மின்னுதே கனம் செய்வோம் (2) பாலகன் ராஜனை.
3. நீதிமான்கள் நீங்கள் எல்லாம் வீண் சிந்தனை மறப்பீர் பிறப்பின் நட்சத்ரம் கண்டோம் வாஞ்சிப்போம் அக்காட்சியை துதி செய்வோம் (2) பாலகன் ராஜனை.
4. பக்தரே நீவீர் யாவரும் பயத்தோடு தொழுவீர் திடீரென கர்த்தர் தாமே தோன்றிக் காட்சி தருவார் ஆராதிப்போம் (2) பாலகன் ராஜனை.