வானதூதர் சேனை போற்ற
vaanadhoodhar senai potra
வானதூதர் சேனை போற்ற பாலன் பிறந்தார் - சகல ஜனங்கட்க்கும் சந்தோஷம் உண்டாக்க பிறந்தார் -2
இயேசு பிறந்தார் எங்கள் இயேசு பிறந்தார் -2 வான சேனை யாவும் போற்ற தேவன் (இயேசு) பிறந்தார் -2
உன்னத தேவனுக்கு மகிமை இந்த பூமியிலே சமாதானம் -2 மனுஷர்மேல் பிரியம் வைத்தாரே கூடி நாமும் துதித்திடுவோம் -2
வானத்திலே நட்சத்திரம் தோன்றி நின்றதே -2 வான சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் பணிந்து கொண்டாரே -2
அதிசயமானவர் வந்து பிறந்தார் ஆலோசனை கர்த்தரும் வந்து பிறந்தார் -2 வல்லமையுள்ள தேவன் வந்து பிறந்தார் சமாதான பிரபுவும் வந்து பிறந்தார் -2