வானாதி வானங்களும்
vaanaadhi vaanangalum
1. வானாதி வானங்களும் கொண்டிடா மகிமை வான்மழையும் நிறைந்தோர் அன்பின் வள்ளலே! வானிலும் புவிலும் ராஜரீகம் செய்யும் அநாதி தேவன்! என் அடைக்கலமே!
ஜீவன் என்னுள் உள்ள காலமெல்லாம் தேவனே துதித்திடுவேன் நீதியின் சூரியன் இயேசுவே! உதித்திடும் என் மீதிலே
2. தாழ்வதின் நிலையில் அடியேனை நினைந்தே வாழ்விக்க வந்த எந்தன் ராஜராஜனே! தாழ்மையுள்ள வர்க்கு பல கிருபைகள் ஈந்திடும் வன் செயல் தன் நாவால் சுழல் ஆகுமா? - ஜீவன்
ஆடுகள் போலவே நல்ல வழியறியாமல் அலையும் மாந்தர்க்கு நீர் ஜீவமார்கம் பேதையையும் எங்கும் திசை கெட்டுப் போய்ட போதனையீந்து எனை நடத்திடுமே - ஜீவன்
4. நித்திய விவாகத்திற்கென்று நியமித்தார் புத்திர சுவீகாரம் ஆவி இந்திரா சத்திய வசனத்தால் மறுரூபழடைந்தே நித்திய மணவாளன் உமை சந்திப்பேன் - ஜீவன்
5. சீரியராகும் உந்தன் சபையில் சேர்த்திட சீயோனின் ராஜானே ! நீர் வேகம் வாருமே வானோர் நடுவினில் உன் புகழ் பாடுவேன் ஆனந்த கண்ணீர் அன்று சொரிந்திடுவேன் - ஜீவன்