வானாதி வானங்களே
vaanaadhi vaanangalae
1. வானாதி வானங்களே போற்றியே ஏற்றிடுங்கள் அநாதி தேவன் ஏகசுதன் தன்னிகரற்ற வர் முன்னுரைப்படியே மன்னுருவாகவே வந்துதித்தார்
அல்லேலூயா துதித்து பாடுவோம் சொல்லும் தேவ சுதன் இயேசுவை புல்லோரின் மீட்பரிவரே
2. அன்னையைப் போன்றவரே இன்னல்கள் தீர்த்திடவே கன்னியில் பிறந்தார் விந்தையிதே மண்ணோரைத் தமது விண்மயமாக்குமோர் மாண்மிகு மருந்தாய் பிறந்தாரே - அல்லே
3. தாழ்மையின் உருவமாய் நீ சரி நினைந்தோராய் ஏழ்மையின் ரூபம் ஏற்றதேனோ வாழ்விக்க தயவால் அழிவல் ஆழ்ந்தோரை தாழ்த்தியே தம்மையே வந்தனரே - அல்லே
4. தாவீதின் சுதன் ஏதுமில்லா எம் தீதுகள் சுமந்த ஆட்டுக்குட்டி மறந்தே தம்மையே துறந்தே பரமே தெரிந்தார் ஆனிடை கொட்டிலையே - அல்லே
5. சத்தியமும் கிருபையும் நிறைந்து சரீரத்தில் சித்தமே செய்திட வந்த சுதன் மெத்தலும் உலகின் ஆக்கினை போக்கிடும் உத்தம இரட்சகர் இவரல்லோ - அல்லே