வானாதி வானம் விட்டு
vaanaadhi vaanam vittu
வானாதி வானம் விட்டு இறங்கி வந்தாரே மன்னாதி மன்னவரே பிறந்து விட்டாரே அவர் ஏழை கோலமாய் தாவீதின் ஊரில் – 2 பிறந்தாரே (2) பாவம் போக்கவே
தூதர்கள் வந்து செய்தி சொல்ல மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே – 2 நட்சத்திரம் வழிகாட்ட வந்தனரே ஞானிகள் அவர்பாதம் பணிந்தனரே மண்ணில் ஒளியாய் வந்தாரே பாவம் போக்க பிறந்தாரே
ஏழை கோலமாய் பிறந்தாரே மரியின் மடியில் தவழ்ந்தாரே ஏசாயா உரைத்த வாக்குபடி மனிதரை மீட்க பிறந்தாரே உலகை ஆள பிறந்தாரே நம்மை மீட்க வந்தாரே