வான் புவி அகிலமும்
vaan puvi agilamum
வான் புவி அகிலமும் மாறி மறந்திடினும் (2) வாக்குரை செய்தவரோ மாறிடாரே (2) - என்றும்
1. விக்கினம் எனை அணுகாது அரணும் அக்கினி மதிலுமவர் போக்கினிலும் வரத்திலும் என் மீதவர் கண்களே நீக்கிடாது பதித்தென்னைக் காப்பவர் - வான்
2. ஆபிரகாமுக்கு ஓர் கானானதுவும் மேவியதோர் சந்ததியும் வாக்குத்தத்தம் செய்த தேவன் வாக்கு மாறவில்லையே எக்காலமும் உண்மையுள்ள தேவனே - வான்
3. கைவிடேன் உனை என் வாக்கு செய்தவர் கைத்தலந்தனில் வரைந்தோர் அந்தியம் வரை என்னுடன் தந்தை என இருந்தேன் சந்ததம் கை தாங்கி என்னை செல்பவர் - வான்
4. நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா இயேசுவே மாசற்ற புகலிடமே வழுவாது என்னை தேவ சந்நிதியில் தம்மை போல பழுதற்றோனாய் நிறுத்த வல்லவர் - வான்
5. அவரிடத்தில் தந்தை யாவும் எனக்காய் பரிந்து காத்திடுபவர் சீயோன் மலை யது போல் அசையாது நிலைக்கும் தூய பரனவர் திரு வார்த்தைகள் - வான்