வான் பரன் இயேசு
vaan paran yesu
வான் பரன் இயேசு ராஜன் அவனியில் மானிடனாய் ஜெனித்தார் - வல்ல
1. ஸ்தோத்திர கீதம் மேய்ப்பரும் கேட்க தூதர்கள் வானில் துதி சாற்ற புல்லணை மீதினிலே பாலகனாய் பிறந்தவர் தான் இவரே - வான
2. மானிடர் பாவம் போக்கிடும் பலியாய் மாநில மீதில் உதித்தாரே சாவும் பேயும் நோயையும் ஜெயித்தவர் தான் இவரே - வான
3. மேய்ப்பனில்லாத ஆடுகள் போல மேதினி மீதில் அலைந்தேனே மேய்த்திடும் மீட்பராய் வந்துதித்த மேசியா தான் இவரே - வான
4. அன்புடன் தம்மை அண்டிடுவோரை ஆதரவாக அணைப்பார் அன்னையும் தந்தையும் போல் விளங்கும் ஆண்டவர் தான் இவரே - வான
5. இம்மானுவேலன் தன் திருப்பாதம் இன்பமுடன் பணிவோமே தோத்திரம் பாடியே போற்றிடுவேன் பாத்திரர் தான் இவரே - வான