வாலில்லை என் மகனே நீ
vaalillai en maganae nee
வாலில்லை என் மகனே நீ தலைதான் கீழில்லை என் மகனே நீ மேல் தான் தரித்தேன் என் நாமம் உந்தன் மீதில் தான் வைப்பேன் என்றும் அலங்கார சீயோனாய்
1. ஒரு வழியாய் சத்துரு வருவான் ஏழு வழியாய் ஓடிப்போவான் கர்த்தர் நின்று உனக்காக யுத்தம் செய்வார் கண்களால் கண்டு நீ மகிழ்வாய்
2. கூடையும் மா பிசையும் உன் தொட்டியும் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிடும் கையிட்டு செய்யும் வேலைகளிளிலும் கர்த்தரின் ஆசிர்வாதங்கள் நிலைக்கும்
3. வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஸ்தலத்தில் கொண்டு சேர்ப்பேன் கர்த்தரின் வேளையில் கர்ப்பக்கனி நிலக்கனிகளிலும் பரிபூரண நன்மை காண்பாய் என்றென்றும்