வாலிபத்தின் நாட்களிலே
vaalibathin naatkalilae
வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால் அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய்
எழுப்பிடும் தொனி கேளாயோ ? எழும்பிடும் காலமல்லோ விழித்தெழு வாலிபனே ! விழித்தெழு கன்னியரே !
1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே - எழுப்பிடும்
2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே அவரோடு நீ நடந்தால் மகிமைதானே வருகையிலே நின்றிடுவாய் இயேசு முன்னே - எழுப்பிடும்
3.வாலிபத்தில் நுகத்தை நீ சுமந்தால் பத்திரமாய் பேழையிலே இருந்திடுவாய் உடைப்பட்டு உருவெடுத்து நீயும் வந்தால் கர்த்தரின் கரத்திலே பயன்படுவாய் - எழுப்பிடும்