வாலிபர்தமக்கூண் அதுவாகும்
vaalibardhamakkoon adhuvaagum
1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுணவாகும்; பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும்.
2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாகும்; புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும்.
3. புலைமேவிய மானிட ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்; நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம்.
4. கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது; புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது