வாலிபரே வாலிபரே வாரிரோ
vaalibarae vaalibarae vaariro
வாலிபரே வாலிபரே வாரிரோ வந்து தேவ வார்த்தைகளைக் கேளிரோ காலம் கடக்கு முன்நாள்கள் பறக்குமுன் பிரியமான நாட்களல்ல என்று சொல்லு முன்னும்
மனுஷனின்நாட்களெல்லாம் புல்லைப் போலவே அவன் செய்திடும் வேலைகள் வருத்தமுள்ளதே உலகமதின் நிறைவும் வாலிபமும் மாயைதான் ஞானியின் வார்த்தைகளை மறந்துவிடாதே
ஆவி தந்த தேவனிடம் செல்லும் முன்னமே ஆயத்தமாய் ஜீவ பாதையில் நடந்திடு நியாயத்திலே வந்து நிற்கும் நாட்களுக்கு முன்னமே ஞானியின் வார்த்தைகளை மறந்துவிடாதே
இருதயத்தின் சஞ்சலத்தை நீக்கி போட்டிடு மாமிசத்தின் தீங்கையும் மாற்றி போட்டிடு ஜீவ தேவசாயலாய் மாறிவிடும் நாள்வரும் ஜீவ தேவன்வார்த்தைகளை மறந்துவிடாதே