வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்
vaakkuthathangal niraivetruvaar
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார் வாக்குறுதி மாறாதவர் - 2
சோராது ஓடிட முழங்காலை நிமிர்த்திடுவார் - 2
பொய் சொல்ல அவர் மனிதனும் அல்ல மனம்மாற அவர் மாந்தரும் அல்ல - 2 உன்னோடு இருப்பவரே அவர் என்றென்றும் மாறாதவர் - 2
முதிர்வயதில் சுமப்பேன் என்றீர் இதுவரை சுமந்தவரே நன்றி - 2 கழுகுக்கு ஒப்பான பலத்தோடு ஓடிட என்னையும் உந்தன் பலத்தால் நிரப்புமே - 2