வாக்குத்தத்தங்கள் ஆயிரம்
vaakkuthathangal aayiram
வாக்குத்தத்தங்கள் ஆயிரம் வழங்கிய தேவனே ஸ்தோத்திரம் வாக்குரைத்தவை ஒவ்வொன்றாய் நடத்தி வருபவரே ஸ்தோத்திரம் - 2
உம் வார்த்தையை நம்பியே வந்துள்ளேன் வாழ்க்கையை உம்மிடம் தந்துள்ளேன் - 2 - வாக்குத்தத்தங்கள்
தாய்தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை என்றும் மறப்பதில்லை உள்ளங்கையில் வரைந்துள்ளேன் எவரும் உன்னை பறிப்பதில்லை - 2 - உம் வார்த்தையை
அக்கினி மதிலாய் நின்றிடுவேன் கண்ணின்மணிபோல் காத்திடுவேன் அனுகுலமான துணையாவேன் அடைக்கலம் தந்து நடத்திடுவேன் -2 - உம் வார்த்தையை
வாதை உன்னை அணுகாது தீமை உன்னை நெருங்காது ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை ஒருநன்மையும் உனக்கு குறைவதில்லை - 2
சிறுமைப்பட்டு போவதில்லை வெட்கப்பட்டு போவதில்லை - 2 - வாக்குத்தத்தங்கள்