வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
vaakkuthatham seydhavar vaakku maarumo
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ - (2) இல்லை இல்லை ஒருபோதும் இல்லை இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-(2) வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம் எந்தன் மீது பாய்ந்தாலுமே நேசித்தவரும் சத்துருக்கள் போல மாறி என்னை எதிர்த்தாலுமே - (2)
இல்லை இல்லை நான் உடைவதே இல்லை இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை - (2) இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
காரிருள்களால் பாதைகள் எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலுமே தரிசனங்கள் நிறைவேறிட தாமதங்கள் ஆனாலுமே-(2)
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-(2) இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்