வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே
vaakkuthatha naadu malaikkappaalae
1. வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே தேவன் கட்டி வைத்த நகரம் உண்டே கஷ்டப்பட்டு மலை உச்சி சேர்கையில் முசிப்பாறும் தாய்நாடு நாம் காண்போமே.
வீடு சமீபம்! வீடு சமீபம் கூடம் மாடம் ஜொலிக்கின்ற ஜோதி பார்! மாமாளிகை இலங்கின்ற மாட்சி பார்! அங்கே சீக்ரம் சேர்வோம் நாமெல்லாருமே கேட்போம் தூதர் பாட்டை வீடு சமீபம்! வீடு சமீபம்!
2. தரிசனத்தின் வாக்குளில் கேட்டுள்ளோம் தங்க வீதி நகர் அலங்காரத்தை அதை இதோ மனக்கண்ணால் காண்கிறோம் அதன் வச்ரமதில் மாளிகையுடன்.
3. யேசுவின் விசுவாசம் உடையவரும் கற்பனையைக் கைக்கொள்வோரும் உட்செல்வர் அங்கே நாங்கள் மகிழ் சத்தம் உயர்த்தி துதி கீதம் என்றும் பாடிடுவோமே.
4. துன்பமே இல்லா அங்த பாக்ய நாட்டிலே எங்களை நீர் சந்திப்பீரா அன்பரே? தேவதூதை ஏற்று உண்மையாயிரும் யேசு வரும் போது உம்மை அழைப்பார்.