வாக்குமாறா தெய்வமே
vaakkumaaraa theyvamae
வாக்குமாறா தெய்வமே உம் வார்த்தை ஒன்றே போதுமே இந்த ஆண்டின் நன்மைகள் எண்ணில் தந்து சேருமே -2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர் அல்லேலூயா -2 நிறைவேறா வாக்குகள் என் வாழ்வில் நிறைவேறும் -2 உம் வார்த்தையில் குறையேயில்லையே என்றென்றுமே -1
அற்புதம் அதிசயங்கள் என் வாழ்வில் நிறைவேற நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் -2 வானத்தின் பலகணிகள் திறக்கவே செய்திடுவீர் -2 உம் மேன்மையாய் என் களஞ்சியம் செழிப்பாகுமே -1
எத்தனை ஆயுதங்கள் என்னை நோக்கி வந்தாலும் எப்போதும் விலகாமல் நீர் காத்திரே -2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர்-2 அதை நினைத்து நான் உம்மை துதித்திட வரம் தந்தீரே -1