வாக்குமாறா கர்த்தரே
vaakkumaaraa kartharae
வாக்குமாறா கர்த்தரே எந்தன் நல்ல இயேசுவே உம்மை என்றும் பாடி போற்றுவேன்-(2)
ஆனந்தமாய் பாடுவேன், ஆர்ப்பரித்து பாடுவேன், துதி செலுத்தி பாடுவேன், இன்றும் என்றும் பாடுவேன்-(2)
1. யோர்தான் நதி எந்தன் வாழ்வில் புரண்டு வந்தாலும் சிங்க கெபி சிறை வாழ்வு சூழ்ந்து கொண்டாலும்-2 தானியேலை காத்தவர் பேதுருவை காத்தவர் என்னை என்றும் காத்து நடத்துவார்-2
2. விசுவாச பாதையில் சோர்பு வந்தாலும் பரிசுத்த ஓட்டத்தில் தடை வந்தாலும் - 2 தடைகளை நீக்குகின்ற கர்த்தர் முன்னே செல்கிறார் வெற்றி கீதம் என்றும் பாடுவேன்-2
3. உலர்ந்து போன எலும்புகளை உயிர்ப்பித்தவர் இன்று உன்னை உயிர்ப்பிக்க அருகில் வருகிறார்-2 உன்னை அவர் கரங்களில் ஒப்புக் கொடுப்பாயானால் இன்று உன்னை அன்பால் நிரப்புவார்-2