வாக்களித்தீர் வாக்கின்படி
vaakkalitheer vaakkinbadi
வாக்களித்தீர் வாக்கின்படியே வாரும் ஆண்டவரே பிதாவின் வாக்கு உன்னத பெலனை தாரும் ஆண்டவரே
எல்லோர் மேலும் வல்லமை ஊற்றும் எல்லோர் மேலும் வந்திரங்கும் 2 அல்லேலூயா வாரும் தேவா அல்லேலூயா அழைக்கின்றோம் 2
மேல்வீட்டறையில் சீஷர்கள்மீது பொழிந்த அருள்மழையே எங்கள் மீதும் பின்மாரி மழையை பொழியும் ஆண்டவரே
மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமாகட்டுமே பெலத்தின் மேலே பெலனடைய நிரப்பும் ஆண்டவரே
விண்ணப்ப ஆவி மன்றாட்டு ஆவி வேண்டும் ஆண்டவரே கண்ணீர் நதியாய் கண்களும் மாற ஜெபத்தினை தந்திடுமே