வா வா வா இயேசுவண்டை
vaa vaa vaa yesuvandai
வா வா, வா இயேசுவண்டை வா உன் இதயத்தை அவரிடம் தா (2)
1. தேசத்தில் சமாதானம் இல்லை - ஓ தேசத்திலே இரக்கமும் இல்லை தேசத்தோடு தேவனுக்கு வழக்கு அது சீக்கிரத்தில் மானிடனே இருக்கு
2. கொஞ்ச காலத்திலே தேவ கோபம் - ஓ பற்றி எரிய போகுது நண்பா இயேசுவின் பாதத்தை முத்தம் செய்தால் தேவ கோபத்திற்கு நீ தப்பித்துக் கொள்வாய்
3. தூற்றுக்கூடை இயேசுவிடம் உண்டு உன் களஞ்சியத்தை நன்றாய் விளக்கி பதரையோ அக்கினியில் எரிப்பார் - நல் மணிகளை களஞ்சியத்தில் சேர்ப்பார்
4. வரும் போது கொண்டு வந்ததில்லை நீ போகும் போது கொண்டு செல்வதில்லை எப்படி உலகில் நீ வந்தாயோ - நண்பா அப்படியே மண்ணுக்கு நீ போவாய்
5. நீதிமானே நிற்பது அரிது - ஓ பாவியே நீ எங்கே போய் நிற்பாய் நீதிபரர் இயேசு வருகின்றார் - தம் நேசக்கரம் காட்டி அழைக்கின்றார்