வா - வா நீ பாவி
vaa - vaa nee paavi
வா - வா நீ பாவி அழைக்கிறார் இயேசு ஆவலாய்த் தம்மிடமே ஆ - ஆ
தேவகுமாரனும் தானே தேடியுனை அலைந்தாரே 2 தேவ கோபம் வரும்முன்னே 2 ஜீவன்பெற தடையென்ன? 2 வா வா
எந்தகோரபாவி நீயாயினும் எண்ணமாட்டார் அதையே ஆ -ஆ உந்தனுக்காகவே தானே உயிர்தனையே கொடுத்தாரே 2 விந்தையாகுமே உன் மீட்பும் 2 சொந்தமாக்கிக் கொள் இப்போதும் 2 வா வா
தன்னிடம் வருமெல் ஆத்துமாவையும் தள்ளமாட்டார் யேசு [ஆ....ஆ] உன்னிடம் அன்போடவர்க்கு உருக்கமும் உண்டு இதற்கு 2 உண்மையாகுமே அத்தாட்சி 2 தம்மைக் கொடுத்ததே சாட்சி 2 வா வா
3. வருந்தி நீ பாவபாரம் சுமப்பதைப் பார்க்க சகிக்காமல் ஆ -ஆ வருந்தியழைக்கிறார் இயேசு வந்து அவரிடம் பேசு 2 திரும்பி மனங்கொண்டு வந்தால் 2 அறிந்திடுவாய் அவர் அன்பை 2 வா வா
4. கல்மனமோ கல்வாரியைக் கண்டும் கரையாதோ உள் உள்ளம் [ஆ....ஆ] நில் சிலுவையண்டை சற்றே நீசன் பாவியென்றுணர்ந்தே 2 நீசன் உனையே மீட்பாரே 2 பாசமாய் அழைக்கிறார் தானே 2 வா வா
5. ஆனந்தபாக்கியம் நீ யடைந்திடுவாய் அவர்பிள்ளையாகும்போது [ஆ....ஆ] கானம் இசைத்து நீ மகிழ்வாய் கர்த்தரின் நாமம் புகழ்வாய் 2 தானங்கள் பலவுமே பெறுவாய் 2 வானவர் வரவில் இன்புறுவாய் 2 வா வா