வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா
vaa paavi kartharin andaikku vaa
வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா
1. பாவியே இன்னும் பயமின்றிப் பாவத்தில் நிலைத்திருக்காதே - இப்போ தாவியே ஜோதியர் உன்னையே அழைக்கிறார் தாமதஞ் செய்யாதே.
2. பாவ நாசர் உனக்கென்று சிந்தின ரத்தம் அதோ பாராய் உல காசையை விட்டகன் றேசுவின் பந்தியில் இச்சணமே சேர்வாய்.
3. ஆபத்துக்குத் தேவ கோபத்துக்கும் தப்ப தீவிரமா யோடி வா - உன் பாவத்தின் சாபத்தை நீக்க வந்த பரி சுத்தரின் அண்டைக்கு வா.
4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி எப்போ குணப்படுவாய் - நீ ஜாலம் பண்ணித் தேவ சாபத்தைத்தேடாமல் இப்போ குணப்படுவாய்.