வா என் அன்பே
vaa en anbae
பல்லவி
வா என் அன்பே வா என் அன்பே என்னோடு பேசிட வா வா என் அன்பே வா என் அன்பே என் மார்பில் சாய்ந்திட வா
உகக்காகத் தானே பலியானேனே உன் பாவம் நீக்க சிறையானேனே உகக்காகத் தானே பலியானேனே உன் பாவம் நீக்க சிறையானேனே உள்ளத்தை எனக்காகத் தா
பல்லவி
வா என் அன்பே வா என் அன்பே என்னோடு பேசிட வா வா என் அன்பே வா என் அன்பே என் மார்பில் சாய்ந்திட வா
கைகளில் கால்களில் ஆணிகள் அன்றோ கரம் நீட்டி உனை சேர்த்தேன் நினைவில்லையோ சிரசினில் முள்முடி உனக்காக ஏற்றேன் சிந்திக்க உனக்கோ மனம் இல்லையோ தடுமாறி விழுந்தேன் தள்ளாடி நடந்தேன் ஈட்டியும் ஏற்றேன் இதயத்தில் சுமந்தேன் எல்லாமே உனக்காக நீ ஓடிவா
பல்லவி
வா என் அன்பே வா என் அன்பே என்னோடு பேசிட வா வா என் அன்பே வா என் அன்பே என் மார்பில் சாய்ந்திட வா
பலகோடி மாந்தர்கள் பாவத்தில் மடிய பரன் அன்பு அறிவிக்க நீ ஓடிவா மடிகின்ற மாந்தர்க்காய் மன்றாடி ஜெபிக்க பரன் பாதம் அமர்ந்தீட நீ தேடிவா கண்ணீர் விட்டழுவாய் கதறி நீ ஜெபிப்பாய் கர்த்தரின் பாதம் கரைசேத்திடுவாய் உனக்காக நான் உண்டு ஓடோடி வா