உயிருள்ள தெய்வமே ஆராதனை
uyirulla theyvamae aaraadhanai
உயிருள்ள தெய்வமே ஆராதனை உருவாக்கும் தெய்வமே ஆராதனை - 2 ஆராதனை ஆராதனை எனை மீட்ட தெய்வமே ஆராதனை - 2
1. பாவியாய் நானிருந்தால் பரிசுத்தம் தருகிறீர் வியாதியாய் நானிருந்தால் சுகம் என்னில் தருகிறீர் உம் அன்பை பாடிடுவேன் உம்மோடு வாழ்ந்திடுவேன்
2. சோர்ந்து நான் போயிருந்தால் ஆறுதல் தருகிறீர் துன்பங்கள் சூழ்ந்திருந்தால் விடுதலை தருகிறீர் உம் அன்பை பாடிடுவேன் உம்மோடு வாழ்ந்திடுவேன்
3. தேவைகள் எனக்கிருந்தால் நிறைவாக தருகிறீர் ஆவியில் அணல் குறைந்தால் புது எண்ணெய் பொழிகிறீர் உம் அன்பை பாடிடுவேன் உம்மோடு வாழ்ந்திடுவேன்