உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தார்
uyirthezhundhaar yesu jeyithaar
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் - 2 உன்னத வல்லமையால் எழுந்தார் முன்னுரைப்படி எழுந்தார் - 2
கல்லறை திறந்திடவே பெருங்கல்லது புரண்டிடவே - 2 கர்த்தர் உ உயிர்த்தெழுந்தாரே கானம் பாடி மகிழ்ந்திடுவோம் - 2
தேடுவதேனினியும் ஜீவ தேவனைக் கல்லறையில் - 2 தேவனின் வன் கரத்தாலே விண் தேகத்தோடே உயிர்த்தார் - 2
மரணத்தின் கூர் எங்கே பாதாளத்தின் ஜெயம் எங்கே - 2 மரணத்தைப் பரிகரித்தார் பரிசுத்தராய் உயிர்த்ததால் - 2
நித்திரையடைந்தோரிலே இவர் முதற்பலனானவரே - 2 நித்திய நம்பிக்கையால் நிறைத்தே நிதம் நடத்துகிறார் - 2
மகிமையின் ஆவியினால் மண்ணின் சாயலை மாற்றுவதால் - 2 மாறியே கண்ணிமை நேரம் மகிமையோடு உயர்த்திடுவோம்
ஜீவன் எம் இயேசுவிலே வைத்து ஜீவியம் செய்திடும் நாம் - 2 ஜீவனில் ஆளுகை செய்தே ஜீவ நாதனை சந்திப்போமே - 2