உயிர்த்தெழுந்த இயேசுவையே
uyirthezhundha yesuvaiyae
உயிர்த்தெழுந்த இயேசுவையே கொண்டாடுவோம் ஊரெல்லாம் நற்செய்தி சொல்லி மகிழ்வோம் பாவ சாப நோய்களெல்லாம் நீக்கிடவே மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே
மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம் நமக்காக உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம் - 2 மரித்த இயேசு உயிர்த்தெழுந்தாரே நமக்காக உயிர்த்தெழுந்தாரே - 2
1. உலகத்தை ஜெயிக்கவே ஜீவன் தந்தாரே உண்மையாய் ஜீவிக்க கிருபை தந்தாரே அவரைப்போல் உலகத்தில் வாழ்ந்து காட்டவே மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே
2. சத்துருவை மேற்கொள்ளும் அதிகாரம் தந்தாரே சாவையும் எதிர்த்திடும் தைரியம் தந்தாரே அற்புதங்கள் அதிசயங்கள் செய்துகாட்டவே மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே
3. ஊழியம் செய்திட அபிஷேகம் தந்தாரே ஊரெல்லாம் சென்றிட பெலனையும் தந்தாரே ஜனமெல்லாம் நித்திய ஜீவன் காணவே மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே