உயிர்த்தெழுந்த உன்னதர்
uyirthezhundha unnadhar
உயிர்த்தெழுந்த உன்னதர் உன்னதரே உயிர்த்தெழுந்தாரே உன்னத அன்பினால் நிறைத்திடுமே
1. கல்வாரி அன்பால் என்னை - சிலுவையின் அடிமை ஆக்கினார் ஜீவிய காலமெல்லாம் நீர் காட்டும் பாதையில் செல்வேன்
2. கல்வாரி காயத்தால் எந்தன் நோய்களையெல்லாம் நீக்கினீரே நீர் செய்த உபகாரத்தை என்றும் மறவாமல் ஸ்தோத்தரிப்பேன்
3. கல்வாரி இரத்தத்தினால் எந்தன் சாபங்கள் யாவும் நீக்கினீரே நல் மனசாட்சியின் நீர் சென்ற பாதையில் செல்வேன்
4. கல்வாரி மகிமையால் என்னை உன்னதங்களிலே உயர்த்தினார் இயேசுவின் நாமத்தை தினம் உயர்த்தி மகிழ்ந்திடுவேன்
5. கல்வாரி மேன்மையால் என்னை பரலோக பாதையில் நடத்துவீரே இயேசுவின் வருகையில் - அவரோடு நான் வென்றிடுவேன்