உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
uyirthezhundha en yesuvaiyae
பல்லவி
உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
மரணத்தை ஜெயமாக விழுங்கினீர் மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2 கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி களிப்பாய் மாற்றுவீரே சாத்தானின் சகல வலிமையை வென்று சிலுவையில் ஜெயம் தந்தீரே
அழுகையின் நாட்கள் முடிந்ததே அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2 பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட இயேசு மரித்தீரே பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட இயேசுவே உயிர்த்தீரே
பல்லவி
உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்