உயிரோடு கலந்து உடலோடு
uyirodu kalandhu udalodu
உயிரோடு கலந்து உடலோடு இணைந்து உயிர் வாழும் இயேசுவே உயிரையே தந்து உடலையும் தந்தது உயிர் வாழும் இயேசுவே -(2) (என்)
உம்மை மறக்க முடியாதையா மறந்தால் வாழமுடியாதையா மறந்தால் நிலைக்க முடியாதையா என் நினைவெல்லாம் இயேசுவே
1) வாழ்க்கையே ஒரு வாழ்க்கை வாழ்வது ஒரு தடவை வாழ்வது எனக்கல்ல வாழ்வு தந்த உமக்காக -(2) உம்மை மறக்க முடியாதையா மறந்தால் வாழமுடியாதையா மறந்தால் நிலைக்க முடியாதையா என் நினைவெல்லாம் இயேசுவே
2) ஈரெழு ஜென்மம் இல்லை இனியும் நான் பிறப்பதில்லை மறுபிறவி எடுப்பதில்லை உமக்கென்று பிறந்தேன் -(2) உம்மை மறக்க முடியாதையா மறந்தால் வாழமுடியாதையா மறந்தால் நிலைக்க முடியாதையா என் நினைவெல்லாம் இயேசுவே
3) உம்மை போல் தெய்வம் இல்லை உம்மை விட்டால் யாரும் இல்லை உம்மை விட்டு பிரிவதில்லை பிரிந்தால் உயிர் வாழ்வது இல்லை -(2) உம்மை மறக்க முடியாதையா மறந்தால் வாழமுடியாதையா மறந்தால் நிலைக்க முடியாதையா என் நினைவெல்லாம் இயேசுவே