உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
uyirodu ezhundhavarkku jae jae
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும் நம் இயேசு ஜீவிக்கிறாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
சாபத்தில் இருந்த என்னை மீட்கவே சாத்தானை சிலுவையிலே வென்றாரே அடிமைதனங்களெல்லாம் முறிந்ததே சுதந்திரமே இயேசு கிறிஸ்துவினாலே
தலைக்கு மேல கை தட்டி தலை வணங்கி கை கூப்பி என் இயேசு ராஜாவுக்கு ஜே ஜே
அன்பிற்காக ஏங்கி நின்ற என்னையே அன்பின் கரங்களால் சேர்த்து கொண்டாரே உலகத்தின் மோகம் குறையுதே சிலுவையின் மேன்மை பெருகுதே