உயிரே உயிரே என் உயிரே
uyirae uyirae en uyirae
உயிரே உயிரே என் உயிரே உயிரில் கலந்த என் உயிரே என் இயேசுவே என் நேசரே என் பாசமே என் சுவாசமே உயிரே என் இயேசுவே
பாதை மாறும் வேளையில் பாதுகாத்த தெய்வமே வேதம் சொல்லும் பாதையில் நடத்தி வந்த ராஜனே என் கால்கள் சறுக்கும் வேளையில் உம் கரமே என்னை அணைத்தது என் நெஞ்சம் கலங்கும் வேளையில் உம் வார்த்தை எந்தன் ஆறுதல் எந்நாளும் உந்தன் மார்பில் சாருவேன் - (2)
உலக ஆசை இன்பமும் வீழ்த்துகின்ற நேரமே உந்தன் பாச வலையினில் என்னை சேர்த்த தேவனே உந்தன் நேசம் தந்த வாழ்வினால் என் தனிமை இனிமை ஆனது உம் சமூகம் நானும் சேர்ந்திட என் இதயம் நாடி தேடுது எந்நாளும் உந்தன் சாயல் காணவேன் - (2)