உயர்ந்த அடைக்கலமே
uyarndha adaikkalamae
உயர்ந்த அடைக்கலமே தேவன் உயர்ந்த அடைக்கலமே ஆபத்துக்காலத்தில் தேவன் அரணான கோட்டை யாமே
1. பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும் அலைகள் கொந்தளித்தாலும் பர்வதங்கள் அழிந்தாலும் பாழ்கடிப்பும் வந்தாலும் பயப்படவே மாட்டேன் - நான்
2. ஜாதிகள் கொந்தளித்து ராஜ்யங்கள் தத்தளித்து பூமியை உருகிப் போனாலும் யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால் எதற்கும் துணிந்திடலாம் - நாம்
3. பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின் செயல்கள் வந்து பாருங்கள் வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முடிக்கிறார் இரதங்களை சுட்டெரிக்கிறார் - இயேசு