உயரமான ஸ்தலத்தில்
uyaramaana sthalathil
உயரமான ஸ்தலத்தில் என்னை நடத்திடுவார்
உன்னதத்தின் அனுபவங்களை ஊற்றிடுவார் ஜீவனுள்ள ஆவியே இறங்கி வாருமே ஜீவத் தண்ணீர் ஊற்றியே என்னை நிரப்பும் கர்த்தருக்குள் மகிழ்ந்திடுவேன் சிறகடித்து நான் பறந்திடுவேன்
1. என்னை நடத்தும் தினமும் என்னை நடத்தும் உன்னதத்தின் பெலத்தினாலே என்னை நடத்தும் காத்திடுவார் நடத்திடுவார் தூக்கி சுமப்பாரே செட்டைகளின் மறைவினிலே நடத்திடு வாரே
2. வானம் திறந்து ஊற்றும் வல்ல ஆவியே உலர்ந்த எலும்பு ஒன்று சேர்த்து ஜீவன் தாருமே நிரப்பிடுவார் எழும்பிடுவார் உறுதிப்படுத்துவார் தேசமெங்கும் அனுப்பிடுவார் தரிசனம் தருவார்
3. அக்கினியின் பெருமழை இன்றே தாருமே அபிஷேக மழையிலே பெலத்தை தாருமே சோர்ந்திடாமல் வீழ்ந்துவிடாமல் ஜெயம் எடுப்போம் சத்துருவின் அக்கினியை அழித்திடுவோம்