உறவு ஒன்று உலகில் தேடி
uravu ondru ulagil thedi
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே ( 2 ) உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2
உள்ளமெனும் கோயிலில் உறவென்னும் தீபமே வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே ( 2 ) அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா
துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே ( 2 ) இறைவனே இயேசுவே இதயம் எழுந்தே வா நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா