உறவாட நான் உயிர் வாழ
uravaada naan uyir vaazha
உறவாட நான் உயிர் வாழ நீ வரவேண்டும் இயேசு பாலகனே உறவாக என் உளம் வாழ நீ எழ வேண்டும் இயேசு நாயகனே
நிலையான உறவு உலகில் இல்லை நான் நினைப்பவரும் என்னை ஏற்பதில்லை மலைபோல புகழை அடைந்தாலும் உனை இழந்தால் எனில் உயர்வுமில்லை - 2 எனக்கென பிறந்த என்னவனே உனக்கென வாழ்வேன் மன்னவனே
குறையில்லா மனிதர் எவருமில்லை குறைகாணும் மனதில் மகிழ்வுமில்லை மனதார எனது பகைவர்களை மன்னித்து மறக்கவும் முடியவில்லை - 2 நிறைவாழ்வைக் காட்டும் முழுமதியே கரைசேர்க்க வந்த கண்மணியே