உன்னிலுண்டே இன்
unnilundae in
உன்னிலுண்டே இன் சீயோனே வன் கிருபையின் நிறைவே எண்ணியெண்ணி நான் நின்னைச் இம்மண்ணில் என்றும் எந்தன் உள்ளம் ஏங்குதே
1. தூய தேவனுக்காய் - இன்ப நேய ஆட்டுக்குட்டிக்குமாய் மானிடர் மாநிலம் யாவினின்றேயிவர் மாறிடா மாசில்லா மீட்பினை பெற்றவர் - உன்
2. தேவ சித்தம் என்றும் - அதை வேத ஆணையாய் ஏற்றும் தேகமதில் புரிந்து திரையொழித்துமே தேவனின் சுதராய் சீயோனில் விளங்குவார் - உன்
3. தந்தையர் அவர் - அந்த சிந்தை தம்மில் உடையோர் விந்தை யாம் மெல்கிசேதேக் முறைமையில் தந்தையின் வதனம் கண்டுமே சேவிப்பார் - உன்
4. இப்புவிதனிலே - மேவி ஒப்புரவாக்கும் பணியில் பானமாய் ஜீவனை சேவையில் வார்த்ததால் பங்குமாய் ஆனதோர் ஒப்பில்லா சீயோனே - உன்
5. சீயோனின் உயர்ந்த வல்ல சீர்பெறும் கொத்தளங்கள் ஜீவித்தோர் சாட்சிகள் பின் தலைமுறையோர்க்கு சிறந்து விளங்கும் விண்ணதில் சுடர்களே - உன்