உன்னை சிறந்திருக்கும்படி
unnai sirandhirukkumbadi
உன்னை சிறந்திருக்கும்படி செய்வேன் என்று சொன்னவரே என்னை சிறந்திருக்கும்படி செய்ய சிலுவை சுமந்தவரே உன்னை சிறந்திருக்கும்படி செய்வேன் என்று சொன்னவரே என்னை சிறந்திருக்கும்படி செய்ய சிலுவை சுமந்தவரே
கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் மகிமையிலும் கிருபையிலும் சிறந்திருக்கும்படி செய்வீர் -2 அல்லேலூயா - 4
1) புழுதியிலே கிடந்த என்னை சடுதியிலே தூக்கினீரே -2 சிறகடியில் வைத்துக் கொண்டு சிறந்தவனாய் நிறுத்திக்கொண்டீர் -2 அல்லேலூயா -4
2) கருவினிலே கண்டவரே கண்மணி போல் காப்பவரே -2 உள்ளங்கையில் வரைந்து வைத்து உயர்ந்தவனாய் மாற்றினீரே -2 அல்லேலூயா -4
3) தடம் (தடு) மாறி போன என்னை தயவாக தேடி வந்தீர் -2 தாயைப் போல் தகப்பனைப் போல் தூக்கினீரே ஆற்றினீரே -2 அல்லேலூயா -4