உன்னை அழைத்தவரோ
unnai azhaithavaro
உன்னை அழைத்தவரோ தினமும் காத்திடுவார் பசும்புல் மேய்ச்சலிலே தினமும் நடத்திடுவார் (2)
1) தண்ணீர் மேல் நடந்தவரும் செங்கடலை பிளந்தவரும் (2) உள்ளங்கையில் வரைந்தவரும் நீர்தானய்யா கார்மேகம் சூழ்ந்தாலும் பார்வோன் படை வந்தாலும் கானானை காணச் செய்தவர் நீர்தான் - இயேசையா (2)
2) மரண பள்ளத்தாக்கிலே - நான் நடந்தாலும் பயப்படேன் சிங்க கெபியில் போட்டாலும் - நான் கலங்காமல் இருந்திடுவேன் (2) வழி நடத்தும் தேவன் என்றும் நீர்தானய்யா
வாக்குகள் மாறாமல் வார்த்தைகள் தவறாமல் அன்போடு அணைத்துக் கொள்ளும் தேவன் நீரைய்யா (2)
3) பாலைவன வாழ்க்கை எந்தன் பசுமையாய் மாறச் செய்தீர் மன்னாவை பொழியச் செய்தீர் மதுரத்தை அருந்தச் செய்தீர் (2) உண்மையுள்ள தேவன் என்றும் நீர்தானய்யா
உயிர் எனக்குத் தந்தவரும் உள்ளத்தில் வாழ்பவரும் உம்மையன்றி யாருமில்லை எனக்கு இயேசையா (2)
பாதைக்காட்ட சென்றிடுவார் பயத்தையெல்லாம் நீக்கிடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் கண்ணின் மணிப்போல் காத்திடுவார் (2)