உன்னதத் ததிபன்
unnadhath thadhiban
உன்னதத் ததிபன் உலகினில் உதித்தாரே உண்மையிதே அன்புதான் - புவியோர்மேல்
1. பாவத்தின் சவக்குழியில் அமிழ்ந்த மானிடர் மேலன்பிதோ மயக்கிய தென்னையும் மாபெரும் கிருபையே என் செய்வே னிவ்வன்பிற்கே - உன்
2. ஆருமற்றவனாய்ப் பாரினில் திரிந்தே காரிருளில் அலைந்தேன் தாரகை யெனவே தடுத்தது கிருபையே என்ன செய்வே னிவ்வன்பிற்கே - உன்
3. நோய் பிணி யாவும் நேயனே சுமந்தே நீர் பரிகாரியானீர் ஏழை யான் பெறவே ஈந்ததும் கிருபையே என் செய்வேன் வான்பிறைக்கே - உன்
4. லெளகீக மாய வலைதன்னில் வீழ்ந்ததே ஐயனே அழிந்திடாதே கல்வாரி காட்டியே காத்தது கிருபையே என் செய்வே னிவ்வன்பிற்கே - உன்
5. ஸ்தோத்திரம் தாவீது கோத்திரம் உமக்கே நேத்திரம் போல காத்தீரே தோத்திரம் பாடவே சேர்த்ததுன் கிருபையே என் செய்வே னிவ்வன்பிற்கே - உன்