உன்னதரின் உயர் மறைவே
unnadharin uyar maraivae
உன்னதரின் உயர் மறைவே சர்வ வல்லவரின் நிழல் தஞ்சமே உம் செட்டை அடைக்கலம் - இயேசுவே உம் கோட்டை பாதுகாப்பே
1.இரவின் பயங்கரங்கள் பகலில் பறக்கும் அம்புகள் மத்தியான சங்காரமெல்லாம் - இயேசுவே உம் செட்டை அடைக்கலமே
2.வலப்புறம் பதினாயிரம் இடப்புறம் மூவாயிரங்கள் இடறிவிழும் நாட்களில் - இயேசுவே உம் செட்டை அடைக்கலமே
3.கூடாரத்தில் வாதைகள் வழிகளில் பொல்லாப்புகள் என்னைக் காக்க தூதர்கள் - இயேசுவே உம் செட்டை அடைக்கலமே