உன்னதரே உம்மை உயர்த்திடுவேன்
unnadharae ummai uyarthiduven
உன்னதரே உம்மை உயர்த்திடுவேன் நான் உள்ளவரை உம்மை போற்றிடுவேன் - 2
நினைவெல்லாம் நீர்தானே உயிரெல்லாம் நீர்தானே பேச்செல்லாம் நீர்தானே என் நேசரே - 2
1. தண்ணீரை கடந்தேன் நீர் என்னை காத்தீர் அக்கினி நடுவே நீர் என்னோடு இருந்தீர் - 2 சிங்கத்தின் குகையில் தள்ளப்பட்டிருந்தேன் சேதங்களின்றி காப்பாற்றினீர்
2. பஞ்சத்தின் நாட்களில் செழிக்க செய்தீர் வேண்டிடும் விண்ணப்பம் நிறைவேற்றி முடித்தீர் - 2 செங்கடல் முன்னே வழியின்றி தவித்தேன் இரண்டாக பிளந்து நடக்க செய்தீர்