உன்னதரே எந்தன் சிருஷ்டிகரே
unnadharae endhan sirushtigarae
உன்னதரே எந்தன் சிருஷ்டிகரே! உம்மைப்போல் என்னை மாற்றிடவே(2)
உன்னதரே எந்தன் சிருஷ்டிகரே! உம்மைப்போல் என்னை மாற்றிடவே(2) உன்னத அழைப்பால் என்னை அழைத்தவரே உள்ளங்கையில் என்னை வரைந்தீரே(2)
இந்த ஏழையையும் நீர் கண்டெடுத்தீர் இந்தப் பாவியையும் நீதிமானாக்கினீர்(2)
1. தாயின் கருவில் நான் இருந்தது முதல் என்னையும் தமக்காய் பிரித்தெடுத்தீரே (2) தமது கிருபை எனக்கும் அளித்து சுவிசேஷ ஊழியம் தயவாய் ஈந்தீர்(2) - (இந்த ஏழையையும்)
2. எந்தப் பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டுப் போவதில்ல (2) கலக்கம் வந்தும் மனம் முறிவில்ல தள்ளப்பட்டும் மடியவில்ல(2) -(இந்த ஏழையையும்)
3. யாரும் அறியாதப் பாட்டினைப் பாடவும் யாரும் காணாதக் காட்சியைக் காணவும் யாரும் தரியாத நாமம் தரிக்கவும் எனக்கும் கிருபைச் செய்தீர் எம்மாத்ரம் -(இந்த ஏழையையும்)
உன்னதரே எந்தன் சிருஷ்டிகரே ! உந்தன் மனதில் என்னை வரைந்தீரே! அற்புதமாய் என்னை தெரிந்தவரே ! அற்ப்பனாம் என்னையும் அழைத்தீரே ! இந்த ஏழையையும் நீர் கண்டெடுத்தீர் இந்தப் பாவியையும் நீதிமானாக்கினீர்(2)