உன்னதமானவர் சர்வவல்லவர்
unnadhamaanavar sarvavallavar
உன்னதமானவர் சர்வவல்லவர் நிகரில்லாதவர் நித்தியமானவர் -(2) சாவை வென்று உயிர்த்தவர் முழு அகிலம் அடங்கும் ஆண்டவர் என் நினைவால் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் -(2)
பாடு பாடு கொண்டாடு கர்த்தரில் உத்தமாய் வாழ்ந்திடு -(2) மகிழ்ந்து பாடு கொண்டாடு தலைமுறை தோறும் தொடரும் அது அச்சம் இல்லாமல் (நிலைக்கும் அது) -3
1) ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தவர் உண்மை உள்ளவர் ஊர் விட்டு வா என கூட்டி சென்றவர் உத்தமம் அணிந்தவர் -(2) காடை மன்னா மதுரமான நீர் தந்தவர் அற்புதர் கானான் நாட்டை சேரும் வரையிலும் துணையாய் வந்தவர் (அவர் ஆதரவானவர்)-(2)
2) அற்பமான ஆரம்பம் எதையும் அலட்சியம் செய்யாதவர் திடமனம் தைரியம் பெலன் தரும் அவரே அதிசயமானவர் -(2) குளவிகள் அனுப்பி எதிரியை துரத்தி ஜெயத்தை தந்தவர் அர்ப்பணம் நித்தமும் தொடர்கின்ற போது உயர்வை அளிப்பவர் (அவர் ஒப்பில்லாதவர் ) -(2)
3) காலங்கள் தோறும் செயல்படும் அவரே சரித்திர நாயகர் வாலிபர் அறிவோர் மேதைகள் உள்ளம் கொள்ளை கொள்பவர் -(2) அகண்ட பூமியில் முழுதும் வாழ்பவர் இதயம் கவர்ந்தவர் மாதிரளாய் தம் சீடர்கள் பெருக்கிடும் இயேசு நல்லவர் (அவர் என்றும் வல்லவர்) -(2)