உன்னத தேவன் உயர்ந்த அடைக்கலமே
unnadha devan uyarndha adaikkalamae
உன்னத தேவன் உயர்ந்த அடைக்கலமே யாக்கோபின் தேவன் எனக்கு ஆதரவே -2
உம் இரட்சிப்பினால் நாங்கள் மகிழ்ந்து உமது நாமத்தில் கொடியேற்றும் -2 தேவனின் நாமம் உயர்ந்த அடைக்கலம் கர்த்தரின் நாமம் எனக்கு புகலிடம் -2 சீயோன் என்றும் ஆதரவே -2
ஆபத்து நாளில் எனக்குத் துணை அவர் இக்கட்டு நாளில் எனக்கு அரண் அவர் -2 ஒத்தாசை அனுப்பும் பர்வதமே என்றென்றுமாய் உம்மை துதித்திடுவேன் -2 தேவனின் நாமம் உயர்ந்த அடைக்கலம் கர்த்தரின் நாமம் எனக்கு புகலிடம் -2
இரட்சிப்பினால் என்னை வழி நடத்தியவர் அபிஷேகம் பண்ணி என்னை இரத்தத்தால் கழுவி விடும் -2 உம் வல்லமை எண்ணில் தந்தருளும் தினம் தினம் பாடி துதித்திடுவேன் -2 தேவனின் நாமம் உயர்ந்த அடைக்கலம் கர்த்தரின் நாமம் எனக்கு புகலிடம் -2 சீயோன் என்றும் ஆதரவே -2