உங்களைத் தவிர எங்களுக்கிங்கே
ungalaith thavira engalukkingae
உங்களைத் தவிர எங்களுக்கிங்கே யாருமில்ல உங்க அன்பை தவிர சொந்தம் என்று சொல்ல ஏதுமில்லை -(2) இன்பம் வந்தாலும் நீங்கதான் பா துன்பம் வந்தாலும் நீங்கதான் இயேசப்பா
பஞ்சம் பசி வந்தாலும் நிர்வாணம் ஆனாலும் நன்றி கெட்ட மனிதரினால் நாசம் மோசம் வந்தாலும் என் இயேசு என்னை காத்திடுவார் தம் சிறகுகளால் என்னை மூடிடுவார் -(2)
வறுமை என் வாடிக்கை நோய்கள் எந்தன் நண்பர்கள் பட்டினி பழக்கம் ஐயா கண்ணீர் என் சொந்தமய்யா இப்படித்தானே நான் வாழ்ந்து வந்தேன் எப்படியோ நீர் இல்லை தெரிந்து கொண்டீர் -(2) உம்மை கிரையம் தந்து என்னை மீட்டுக் கொண்டீர் உந்தன் கிருபையினால் புதுவாழ்வு தந்தீர்