உங்க சமூகத்தில அமர்ந்து
unga samoogathila amarndhu
உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்பா உங்க தயவால் என்னை நினைத்தருளும் உங்க கிருபையினால் நானும் நிற்கிறேன்பா உங்க தயவால் என்னை நினைத்தருளும்
கிருபையின்மேல் கிருபைகளை எனக்கு தருவதினால் கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ கடப்பேனே - 2 உங்க தயவால் என்னை நினைத்தருளும் - 2
1. நீர்த்துளியைப் போல உம் அன்பை பொழிந்தீரே மறவேனோ உம் அன்பை என்றும் மறவேனோ - 2 ஏற்ற சமயத்தில எனக்கு துணையாய் வந்தீரே ஏற்ற வேளைகளில் நீரே என்னை கண்டீரே - 2 உம்மையே துதிப்பேன் என்றென்றுமே
2. விழுந்துபோன என் வாழ்வை மீண்டுமாய் துளிர்க்க செய்தீர் கண்ணீருக்கு பதிலாக களிப்பாய் மாற்றினீர் - 2 புடமிட்டதினால் பொன்னாக விளங்க செய்தீரே சோதனையில் நீர் எனக்கு பெலனை தந்தீரே - 2 நீரூற்றாய் மாற்றிக்கொள்ள எனக்கு நீர் உதவினிரே
3. பெலத்தின் மேல் பெலன் தந்து கழுகைப்போல் எழும்ப செய்தீர் சோர்ந்திடாமல் இடறிடாமல் ஓட வைத்தீர் - 2 ஒரு குறைவில்லாமல் என்னை நீர் நிறைவாய் மாற்றினீரே எல்லா மனிதர் முன்பும் என்னை நீர் உயர்த்தி வைத்தீரே - 2 ஜீவனுள்ள நாளெல்லாம் உமக்காக வாழ்ந்திடுவேன்.