உங்க பிணைப்பிற்கு
unga pinaippirku
உங்க பிணைப்பிற்கு இணையில்லையே நீங்க பிடிச்சதால் உயிர் வாழ்கிறேன் – 2
இணைப்பில்லா நெடியதில் நானில்லையே இணைப்பவர் இருக்கையில் பயமில்லையே – 2
நான் உம்மோடு இணைந்திருக்க என்னோடு இணைந்திருப்பீர் என் ஜீவன் உமக்குள்ளே ஒளித்து வைத்தீர் – 2 மகிமையை உம்மோடு சேர்த்துக் கொள்வீர் (இணைப்பில்லா…)
உலகம் தரக்கூடா சமாதானம் நீர் தருவதால் உயிர் வாழ்கிறேன் உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் – 2 என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா
உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன் ஆவியில் ஜெபித்திடுவேன் அப்பா என் கரம் பிடித்து நடத்திடுவார் – 2 விசுவாச வார்த்தையால் ஜெயம் பெறுவேன் (உங்க பிணைப்பிற்கு…)